அலுவல் நேரம்
24/7
எங்களை அழைக்க
இணைய முகவரி
info@andersondiagnostics.com
sr@andersondiagnostics.com
இதுவே சரியான நேரம், மாமோகிராம் சோதனை பற்றி சிந்திப்பதற்கு!
அதிர்ச்சி தரும் எண்ணிக்கை
2020 இந்தியாவிற்கு இனிய ஆண்டு.
ஆனால் ….! புற்றுநோயைப் பொறுத்தமட்டில் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கடினமான ஆண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.
ஆம். 2020-ம் ஆண்டு, இன்று இருப்பதைவிடக் கூடுதலாக 17.3 இலட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது தான் உண்மை. 2020-ஆம் ஆண்டிற்குள் 8.8 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சர்வீகல் புற்றுநோயால் இறக்கக்கூடும் என்ற நிஜத்தை இந்திய மருத்துவக் கழகத்தின் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இச்செய்தி நெஞ்சை உலுக்குவதாய் உள்ளது. பெண்களுக்கு எதிராக, மார்பகப்புற்று நோய் முழுவீச்சோடு போர் தொகுத்துக் கொண்டிருக்கிறது.
மார்பக புற்றுநோய் குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்?
மார்பக புற்றுநோய் இந்தியப் பெண்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக மகளிரையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்கள், இயல்புகள் அதற்கான கூறுகள் ஆகியவை வேறுபட்டவையாக உள்ளன. இன்றைய நாளில் இளையோரைக் குறிவைத்து மார்பகப் புற்றுநோய் தாக்கிக் கொண்டிருக்கிறது. மார்பக புற்றுநோயின் ஆரம்பநாட்களில் அதை அடையாளங்காணவோ, கண்டறியவோ முடிவதில்லை. திரைப்படுத்துதல் பற்றிய அறியாமையும், விழிப்புணர்வு இன்மையுமே இதற்குத் தடையாக உள்ளன. ஆரம்பகட்ட கண்டறி சோதனை, புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுத்துவிடும், மேலும் புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்து பழைய வாழ்க்கையை வாழ முடியும். ‘இள வயது பெண்களிடம்’ மார்பகப் புற்றுநோய் மிக வேகமாகப் பரவி வருகிறது.
‘மாமோகிராம்’ எனும் மந்திரச் சொல் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது அவசியம். மாமோகிராம் மார்பகப் புர்றுநோயின் ஆரம்பக் கட்டத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 35% பெண்கள் மாமோகிராம் உதவியால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், நோயாளிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுவது எளிதாகும். இது இல்லாததால், பல பெண்களுக்கு மார்பகத்தை அகற்ற நேரிடுகிறது.
சிக்கலான சமயங்களில், மாமோகிராம் சோதனை போதுமானதாக இருப்பதில்லை. சாதாரண திசுக்கள் புற்றுநோய் செல்களை மறைக்க வாய்ப்புண்டு. அதை மாமோகிராம் முறை துல்லியமாக காட்ட முடியாத நிலை ஏற்படுவதுண்டு. அதேபோல் சாதாரண திசுக்கள், புற்றுநோய் செல்களைப்போல் தோற்றமளிப்பது உண்டு. இதனால் தேவையில்லாமல் ஒருவரை சிகிச்சைக்கு உட்படுத்த நேரிடுகிறது. இதனால் நோயாளி, மருத்துவர் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. இத்தருணத்தில் மாமோகிராம் சோதனையோடு, பிற சோதனைகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பெண்கள் சுயபரிசோதனை மூலமாகவும், மருத்துவரின் மூலமாகவும் மார்பகத்தைப் பரிசோதனை செய்து கொள்ளலாம். மார்பகத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை அல்ட்ரா சவுண்ட் மூலமும் கண்டறிய முடியும்.
புற்றுநோய்க்குத் தரப்படும் கதிர்வீச்சின் அளவு குறித்து பெண்கள் பலர் கவலையும், அச்சமும் கொள்கின்றனர். இப்பயத்தை நீக்க மாமோகிராம் உதவுகிறது. எக்ஸ்ரே கதிர்களை விட மிகக் குறைந்த கதிர்வீச்சே மாமோகிராமிலிருந்து வெளிப்படுகிறது.
மாமோகிராம் - ஐந்து உண்மைகள்
மாமோகிராம் உதவியால் புற்றுநோய் பாதிப்பால் இறப்பை நோக்கி பயணிப்போரில் 30% பேர் காப்பாற்றப்படுகின்றனர்.
மாமோகிராம் சோதனை 20 நிமிடங்களில் நிறைவடையக் கூடியது. இச்சோதனை வலி தரக் கூடியதல்ல. இதிலிருந்து வெளிப்படும் மிகக் குறைந்த கதிர்வீச்சால் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை.
50 வயதுக்குட்பட்ட பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு கம்ப்யூட்டர் மாமோகிராம் பரிந்துரை செய்யப்படுகிறது. மார்பகத்தில் உள்ள சிறிய மாற்றம் கூட கம்ப்யூட்டரில் பதிவாகி விடும். மருத்துவர் திரையில் பெரிதாக்கி தெளிவாக உற்றுநோக்க முடியும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பயாப்ஸி சோதனை மேற்கொள்ள அறிவுறுத்துவார். இதற்காக கவலைப்படத் தேவையில்லை. இச்சோதனைகள் எல்லாம் தெளிவான, சரியான கண்டறிதலுக்கு மட்டுமே என்பதை உணர வேண்டும். வீணான அச்சம் எந்த நன்மையையும் ஏற்படுத்தப் போவதில்லை.
எல்லா சமயங்களிலும் மாமோகிராம் சோதனையில் துல்லியமாக கண்டறிய முடியும் என்பதில்லை. மாமோகிராமோடு சுயபரிசோதனை, அல்ட்ராசவுண்ட் சோதனை, பிற சோதனைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வகையான கூடுதல் பரிசோதனைகள் மாமோகிராம் முறையை மிகவும் துல்லியப்படுத்த உதவுகின்றன.
துல்லியமாகவும் தெளிவாகவும் கண்டறிவதற்காக ஏற்கனவே மாமோகிராம் எடுக்கப்பட்ட பெண்களில் 10% பேர் மீண்டும் மாமோகிராம் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதனால் புற்றுநோய் வந்துவிட்டது, கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்று தவறாக நினைத்து பயப்படத் தேவையில்லை. நுணுக்கமாக, தெளிவாக, துல்லியமாகத் தெரிந்து கொள்வதே இதன் நோக்கமாகும்.
வெடித்துப் பரவும் வதந்திகள்
மாமோகிராம் பற்றித் தவறான கருத்துக்கள் நிறைய உலா வருகின்றன. அவற்றில் ஒன்று மாமோகிராம் சோதனை புற்றுநோயின் செல்களை உடைத்து மிகப்பெரிய கட்டிகள் உருவாவதற்கு காரணமாகி விடுகின்றது என்ற தவறான கருத்து மக்கள் மனதில் பதிந்துள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை உண்மையுமில்லை, மாறாக தாமதமான சிகிச்சையே நோயைக் குணப்படுத்த முடியாத நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பதே உண்மையாகும்.
எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியவை
ஏற்கனவே மாமோகிராம் சோதனைக்கு உட்பட்டவர்கள் அது பற்றிய தகவல்களைத் தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் மாமோகிராம் சோதனையை மேற்கொள்ளும் போது அந்த் ரெகார்டுகளை மருத்துவரிடம் காண்பித்தல் வேண்டும்.
மறுமுறை மாமோகிராம் சோதனைக்கு உட்படும்போது முதல் முறை எடுத்த சோதனையின் முடிவுகளை, தற்போதைய முடிவுகளோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும்.
புதிதாக ஏதேனும் கட்டிகளோ, மாற்றங்களோ தென்பட்டால் மருத்துவர் மீண்டும் மாமோகிராம் சோதனையை மேற்கொள்ள அறிவுறுத்துவார். குழப்பமும் அச்சமும் இன்றி மருத்துவரிடம் இது குறித்துப் பேசி தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாமோகிராம் சோதனையின் போது ஆடைகளை கழற்றுவதற்கு எளிதாக இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். மாமோகிராம் சோதனையின் போது வாசனைத் திரவியங்கள், நோய்த் தடுப்பு மருந்துகளைத் தவிர்த்தல் வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் மார்பகம் தளர்ந்தோ விரைப்பாகவோ இருக்கும். அச்சமயத்தில் மாமோகிராம் சோதனையை தவிர்த்தல் வேண்டும்.
மருத்துவரிடம் உங்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நோய்கள் குறித்து விவாதித்தல் அவசியமாகும்.
மாமோகிராம் பற்றிய வதந்திகள், தவறான கருத்துக்களை மனதிலிருந்து அகற்றுங்கள். அது உயிர் காக்கும் சாதனம் என்பதை மட்டும் நம்புங்கள்.
டயக்னாஸ்டிக் லேப்
மார்பகப் புற்றுநோய் அது கண்டறியும் சோதனை மாமோகிராம்.
புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறியும் திரையிடல் சோதனை மாமோகிராம்.
பெரிய மார்பகம், புற்றுநோய் ஆபத்து என்ற குழப்பத்திற்கு முடிவு கட்டக்கூடியது மாமோகிராம்.
முகவரி
ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் லேப்ஸ்,
No.150, பூந்தமல்லி நெடுஞ்சாலை,
(தாஷப்பிரகாஷ் ஹோட்டல் எதிர்புறம்)
சென்னை - 600 084.
நாம் பேச
இணைய முகவரி
info@andersondiagnostics.com
sr@andersondiagnostics.com
எங்களைப் பற்றி
2008- ஆம் ஆண்டிலிருந்து மக்களின் உடல்நலம் கருதி மருத்துவத் தொழில்நுட்பத் துறையோடு எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம் என்று கூறுவதில் பெருமை கொள்கிறோம்.
துல்லியம்
தெளிவு
நுணுக்கம்
உடனுக்குடன்
இதுவே ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் லேப்ஸ்
அனைத்து வகையான பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் செய்து கொள்ளும் நவீன தொழில்நுட்ப வசதி கொண்டது ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் லேப்ஸ்.
கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தைக் கையாண்டு மக்களின் உடல்நலம் விரைவாக மேம்பட சேவைபுரிந்து வருகிறது.
திரைப்படுத்துதல் மூலம் மார்பகப் புற்றுநோய், செர்வீகல் புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கும் பணியில் ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் லேப் சிறப்பிடம் பெறுகிறது.