குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கரு IVF சிகிச்சையின் வெற்றி விகிதத்தை பாதிக்கிறது. கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் ஏற்படும் 70 சதவீத கருச்சிதைவுகள் கணிக்க முடியாத குரோமோசோம் குறைபாட்டால் ஏற்படுகின்றன. இதற்கு ஒரு தவறான கரு முட்டை அல்லது விந்து காரணமாக இருக்கலாம், இது அசாதாரண கருக்களை விளைவிக்கும்..
30 களின் தொடக்கத்தில் உள்ள பெண்களுக்கு சுமார் நான்கில் ஒரு பாகம் குரோமோசோம் குறைபாடுகள் காணப்படும், 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு சுமார் இரண்டில் ஒரு பாகம் குரோமோசோம் குறைபாடுகள் காணப்படும். மேலும் குரோமோசோம் குறைபாடுகள் IVF தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இத்தகைய குறைபட்ட கொண்ட பெரும்பாலான கருக்கள் உட்செலுத்துவதில் தோல்வி ஏற்படுகிறது, மேலும் வெற்றிகரமாக உட்கிரகிக்கப்படும் கருக்கள் பெரும்பாலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஏற்படுத்துகின்றன. முன்-உட்பொருத்தமைப்பு மரபணு திரையிடல் (PGT-A (PGS)) மிகவும் சாத்தியமுள்ள மற்றும் ஆரோக்கியமான கருக்களைத் தேர்ந்தெடுப்பதில் உதவுகிறது.
கருவுறுதல் நிபுணர்களுக்கு நவீன தொழில்நுட்பம் ,குரோமோசோம் குறைபாடுகளை கண்டுபிடிப்பதற்கு 98 சதவீதம் துல்லியமாக கணிக்க உதவுகிறது. பெற்றோரில் ஒருவர் மரபணு நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், குழந்தைக்கு அந்த நோய் வருவதற்கு 25 சதவீத வாய்ப்பு உள்ளது.கருவில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய திரையிடல் அசிஸ்டட் ரெப்பட்ரோடிக் டெக்னாலஜி (ART) உதவுகிறது.
PGT-A (PGS) ஆல் IVF இன் வெற்றி விகிதம் 30 சதவிகிதம் அதிகரிக்கபடுகிறது.. 38 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது, மீண்டும் மீண்டும் IVF உள்வைப்பு தோல்வியில் பாதிக்கப்பட்டவர்கள் (கரு உட்செலுத்துவதில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை வெற்றி பெற இயலாதவர்கள்), தொடர் கருச்சிதைவு அல்லது குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்காட்டாக டவுன் சின்ட்ரோம் அல்லது ஆண் மலட்டு தன்மை கொண்டவர்கள்.
PGT-A (PGS) நாம் முன்பு கண்ட தொழில்நுட்பங்களை விட அதிக கர்ப்ப வெற்றி வீதங்களுக்கு வழிவகுக்கிறது எனவே எல்லா வயது பெண்களுக்கும் இது ஏற்றது IVF சிகிச்சை பெறும் அனைத்து பெண்களுக்கும் வெற்றி பெறும் வாய்ப்புகளை அதிகரிக்க PGT-A (PGS) சோதனைகள் பரிந்துரைக்கப்படுகிறது